சினிமா
சமந்தா உடனான அந்த ஒரு ஃபோட்டோவை நீக்காத நாகசைதன்யா… ரசிகர்கள் கமென்ட்ஸ் மழை…
சமந்தா உடனான அந்த ஒரு ஃபோட்டோவை நீக்காத நாகசைதன்யா… ரசிகர்கள் கமென்ட்ஸ் மழை…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்த நிலையில், சமந்தா உடனான அனைத்து ஃபோட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் நாக சைதன்யா நீக்கி விட்டார். ஆனால் சமந்தாவுடன் இருக்கும் ஒரேயொரு ஃபோட்டோவை மட்டும் விட்டு வைத்துள்ளார் நாக சைதன்யா.
நாளை நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் கமென்ட்ஸ் செய்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே நாளை திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் முடித்து பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு முன், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமந்தா நீக்கிவிட்டு, விவாகரத்து பெறப்போவதாக சூசகமாகத் தெரிவித்தார். அப்போது இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவற்றை உண்மையாக்கி நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெற்றனர்.
இருப்பினும் தற்போது வரையில் சமந்தாவுடன் இருக்கும் ஒரேயொரு ஃபோட்டோவை மட்டும் நாக சைதன்யா நீக்காமல் இருந்து வருகிறார். அதாவது, இருவரும் இணைந்து மஜிலி என்ற படத்தில் நடித்தனர். இந்த படத்துடைய போஸ்டரை 2018 டிசம்பர் 30 ஆம் தேதி நாக சைதன்யா வெளியிட்டிருந்தார்.
இந்த போஸ்டர் ஃபோட்டோவை மட்டும் அவர் நீக்காமல் வைத்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவரவில்லை. இந்த ஃபோட்டோவின் கீழ் ரசிகர்கள் கமென்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.