இலங்கை

ஜனாதிபதியின் உருவத்தை உருவாக்கி உலக சாதனை படைத்த சிறுவன்

Published

on

ஜனாதிபதியின் உருவத்தை உருவாக்கி உலக சாதனை படைத்த சிறுவன்

சன்சுல் செஹன்ஷ லக்மால் என்ற 11 வயது சிறுவன் ஆயிரத்து 200 ரூபிக்ஸ் சதுரமுகிகளைப் பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார்.

 இந்த சாதனையை 3 மணி நேரம் 13 நிமிடங்கள் 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளார்.

Advertisement

யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை நீச்சல் தடாகத்தில் முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

சன்சுலின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அமைப்பாளர்கள், இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து அவருக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவற்றுடன் அவரது பெரும் சாதனையை கௌரவிக்கும் வகையில் கோப்பையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version