இலங்கை

தாய், தந்தை, மகள் கொலை; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்

Published

on

தாய், தந்தை, மகள் கொலை; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்

  டெல்லியில் தாய், தந்தை, மகள் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55) என்பவர் மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் அர்ஜுன் (20) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், நேற்று (4) ராஜேஷ் தன்வார், மனைவி கோமல், மகள் கவிதா மூவரும் வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.

காலையில் ஜாக்கிங் சென்று வீட்டுக்கு வந்த மகன் அர்ஜுன் மூவரின் சடலத்தை கண்டு அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்ததுடன் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

Advertisement

அதனை தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையில் இறங்கிய போலீசார், இந்த கொலை சம்பவம் பணம், நகைக்காக நடந்தப்படவில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்நிலையில் ஒரு குடும்பத்தில் ஒருவரை தவிர, மற்ற மூன்று பேரும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டிருப்பது பொலிசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது.

கன் அர்ஜுனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

அத்துடன் அவருடைய கையில் புதிதாகக் காயம் காணப்பட்டதுடன், கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அர்ஜுனுக்கும் அவருடைய தந்தை மற்றும் குடும்பத்தினருடனான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், இவ்வாறு கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு அர்ஜுன் குறித்து வீட்டில் பெரிய பிரச்சினை வெடித்துள்ளது. அப்போது, மகன் கீழ்படியவில்லை என தந்தை தண்டித்ததுடன், தனது சொத்தை மகள் பெயருக்கு எழுதி வைக் உள்ளதாக கூறினார்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் தந்தை, தாய், சகோதரி மூவரையும் கொலை செய்ய திட்டமிட்டு பெற்றோரின் 27வது திருமண நாளான நேற்று அரங்கேற்றியுள்ளார்.

இந்நிலையில் மகனே , தன் குடும்பத்தை கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version