சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு முறை திருமணமா!! வெளியான புது ட்விஸ்ட்..
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு முறை திருமணமா!! வெளியான புது ட்விஸ்ட்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வருன் தவானுடன் பேபி ஜான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அப்படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.இதற்கிடையில் தன்னுடைய 15 ஆண்டுகால ஆண் நண்பர் அந்தோனி தட்டில் என்பவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகி வந்தது. அதனை கீர்த்தி சுரேஷும் அதிகாரப்பூர்மாக டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் என்று அறிவித்தார்.தொழிலதிபராக இருக்கும் அந்தோனி தட்டில் கிறிஸ்தவர் என்பதால், கீர்த்தி சுரேஷ் மதம் மாறப்போவதாகவும் இருவரது திருமணமும் கிறிஸ்தவ முறைப்படி நடக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் திருமணம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அதாவது கீர்த்தி மதம் எல்லாம் மாறவில்லை என்றும் டிசம்பர் 12 ஆம் தேதி காலை இந்து முறைப்படி முதலில் திருமணம் நடக்கும் என்றும் அதே நாள் மாலையில் தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இரு முறைப்படியான திருமணமும் கிட்டத்தட்ட கோவாவில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.