இலங்கை

நாடாளுமன்றில் தமிழரசு கட்சியின் மற்றுமொரு சதி அம்பலம்!

Published

on

நாடாளுமன்றில் தமிழரசு கட்சியின் மற்றுமொரு சதி அம்பலம்!

 இலங்கை நாடாளுமன்றில் கட்சிகளுக்கு மூப்பு அடைப்படையில், நாடாளுமன்றத்தின் முன்வரிசை ஆசனங்கள் வழங்குவது மரபாக உள்ளது.

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக சிறிதரன் உள்ள நிலையில் முதல் வரிசையில் சிறிதரன் ஆசனம் வழங்ப்பட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்றில் இலங்கை தமிழரசு கட்சிக்கு முன் வரிசையில் இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறிதரனுக்கு அடுத்தபடியாக மூப்பு அடிப்படையில் முன்வரிசையில் அமரவேண்டியவர்கள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் , அல்லது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனுக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த ஆசனத்தை அவர்களுக்கு ஒதுக்காது , முன்னாள் எம்.பி சுமோவின் நிகழ்ச்சி நிரலில் சாணக்கியன் எம்.பிக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை நாடாளுமன்றில் சுமோவின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற வைத்தியர் , சுமோவின் நிழலாகவே நாடாளுமன்றில் செயல்படுகின்றார்.

Advertisement

அதேசமயம் வைத்தியரே தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் பிரதம கொறடாவாகவும் உள்ளார். இந்நிலையில் அவரது செயல் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழரசு கட்சியில் சுமந்திரன் – சிறிதரன் அணி என பார்க்கையில், கட்சியின் பதில் செயலாளராக இருந்தபோது பல்வேறு தில்லு முல்லுகளைச் செய்து விமர்சனங்களுக்கு உள்ளான வைத்தியர், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.       

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version