சினிமா

பிரமாண்டமாக நடைபெறப்போகும் நாக சைதன்யா திருமணம்.. முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்பு..

Published

on

பிரமாண்டமாக நடைபெறப்போகும் நாக சைதன்யா திருமணம்.. முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்பு..

நாளை நடைபெறவுள்ள நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமணத்தில் முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திருமணத்தில் பங்கேற்க மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே நாளை திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

திருமணத்தையொட்டி அதற்கு முன்னதான பல்வேறு சடங்குகளை மணமக்கள் வீட்டினர் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமணம் நடைபெறுகிறது.

இந்த திருமணத்தில் “புஷ்பா” படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன், நடிகர் மகேஷ்பாபு, நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரை நட்சத்திரங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த திருமணம் நடைபெற உள்ளது.

Advertisement

சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோபிதா ஏராளமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தெலுங்கு பிராமண பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

சுமார் 8 மணி நேரமாக இந்த திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தாவை நாக சைதன்யா 2017 அக்டோபர் மாதம் திருமணம் முடித்தார். இந்தியாவில் மிகவும் பிரபலமான திரை ஜோடியாக இருந்து வந்த இவர்கள் 2021 அக்டோபரில் பிரிந்தனர். அதற்கு அடுத்த ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது.

இந்நிலையில் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார் நாகசைதன்யா. அவருக்கு திரை துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version