இலங்கை

பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த சிறுகோள்! மக்கள் கண்ட காட்சி

Published

on

பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த சிறுகோள்! மக்கள் கண்ட காட்சி

ரஷ்யாவில் உள்ள சைபீரியா வட்டாரத்தில் வட பகுதியில் சிறுகோள் ஒன்று பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

Advertisement

69 சென்ட்டிமீட்டர் நீளமுள்ள அந்தச் சிறுகோள் கண்களால் பார்க்கக்கூடிய தீப்பிழம்பை ஆகாயத்தில் உருவாக்கக்கூடும் என ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அமைப்பு தெரிவித்தது.

குறித்த தீப்பிழப்பை சைபீரியா வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சிறுகோளுக்குத் தற்காலிகமாக C0WEPC5 எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுவரை 11 சிறுகோள்கள் பூமியல் தென்பட்டுள்ளன. அவற்றில் 4 இந்த ஆண்டு தென்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version