தொழில்நுட்பம்

போலி ஐபோனை கண்டுபிடிப்பது இவ்வளவு ஈஸியா…? எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா…?

Published

on

போலி ஐபோனை கண்டுபிடிப்பது இவ்வளவு ஈஸியா…? எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா…?

Advertisement

எப்பொழுதும் ஐபோன்களை ஆப்பிள் ஸ்டோர் போன்ற நம்பகமான ரீடெயிலர்களிடம் இருந்து வாங்குவது நல்லது. அதிகாரப்பூர்வமற்ற மூலங்களில் இருந்து வாங்குவது அல்லது உங்களுடைய சாதனங்களை அங்கீகரிக்கப்படாத ரிப்பேர் கடைகளில் கொடுப்பதன் மூலமாக ஐபோன் சாதனங்களில் உள்ள பாகங்கள் போலியாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே இந்த பதிவில் போலி ஐபோன்களை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் இது போன்ற மோசடிகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பேக்கேஜிங்கை கண்காணித்தல் உண்மையான ஐபோன் பாக்ஸில் நல்ல தரமான அதிக ரெசல்யூஷன் கொண்ட புகைப்படங்கள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். எனினும் போலியான பாக்ஸுகளில் தரம் குறைந்த பிரிண்டிங் அல்லது லூஸ் பேக்கேஜிங் இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஐபோன் பாக்ஸில் உள்ள சார்ஜிங் கேபிள் நல்ல தரமானதா என்பதை சோதிப்பது அவசியம்.

Advertisement

ஐபோனில் உள்ள செட்டிங்ஸ் பிரிவில் காணப்படும் ஜெனரல்>அபௌட் என்பதில் உள்ள சீரியல் நம்பரை கண்டுபிடித்து, அதனை ஆப்பிளின் செக் கவரேஜ் பேஜில் என்டர் செய்யுங்கள். இது உங்களுடைய சாதனத்தின் மாடல், வாரண்ட்டி ஸ்டேட்டஸ் மற்றும் பிற விவரங்களைக் காட்டும். பிறகு உங்களுடைய ஐபோனில் *#06# என்று டயல் செய்வதன் மூலமாக IMEI நம்பரை தெரிந்து கொள்ளலாம். இந்த IMEI நம்பர் பாக்ஸில் உள்ள IMEI நம்பருடன் ஒத்துப் போகிறதா என்பதை கவனிக்கவும்.

Advertisement

உண்மையான ஒரு ஐபோனில் உள்ள பாகங்களில் எந்தவொரு இடைவெளியோ அல்லது லூசாக உள்ள பாகங்களோ இருக்கக்கூடாது. பட்டன்கள் கிளிக் செய்வதற்கு சுமூகமாக இருக்க வேண்டும். மேலும் ஐபோனின் பின்புறத்தில் உள்ள ஆப்பிள் லோகோ சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள். ஸ்கிரீன் அளவு, எடை மற்றும் அதன் தடிமன் ஆகியவற்றை சோதித்துப் பார்க்கவும். சிம் டிரேயை அகற்றி, அதில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.

 

Advertisement

உங்களுடைய ஐபோன் ஆப்பிளின் iOS மூலமாக இயங்குகிறதா என்பதை சோதிக்க செட்டிங்ஸ்>ஜென்ரல்> சாப்ட்வேர் அப்டேட்டுக்கு சென்று பார்க்கவும். போலியான ஒரு சில சாதனங்கள் ஆண்ட்ராய்டை பயன்படுத்தக்கூடும். மேலும் உங்களுடைய ஐபோனில் உள்ள அம்சங்களை கண்டுபிடிப்பதற்கு ‘ஹாய் சிரி’ என்று சொல்லிப் பாருங்கள். சிரி ஆக்டிவேட் ஆகாவிட்டால் அது போலியான சாதனமாக இருக்கலாம்.

இன்னும் உங்களுடைய சாதனம் போலியானதா அல்லது உண்மையானதா என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் சர்வீஸ் சென்டருக்கு சென்று அங்குள்ள நிபுணர்களிடம் உங்களுடைய சாதனத்தை ஒப்படைத்து சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஐபோன்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் எப்பொழுதும் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களுக்கு மட்டுமே உங்களுடைய சாதனத்தை ரிப்பேருக்கு கொடுக்கவும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version