இந்தியா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள்!

Published

on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள்!

இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது எக்ஸ் தளத்தில் இவ்வாறு கருத்தை பகிர்ந்துள்ளார்.

மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஈடு இணையில்லா நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை, இந்த இயக்கத்தை பல்வேறு சோதனைகளையும் தாண்டி மக்களுக்கான பாதையில் தொடர்ந்தும் பயணம் செய்ய உயிராய், உணர்வாய், உந்து சக்தியாய் திகழும் புரட்சித் தலைவி அம்மாவை அவரது நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

Advertisement

அம்மா காண்பித்த வழியில் மக்களின் குரலாய் என்றும் ஒலிப்போம். தீய சக்திகளின் ஆட்சியை துரத்தியடித்து அம்மா ஆட்சியை மீண்டும் அமைத்து அனைவருக்கும் அமைதி, வளம், வளர்ச்சி பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அம்மாவுக்கு செலுத்தும் புகழஞ்சலி எனக் குறிப்பிட்டுள்ளார்.  (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version