இலங்கை
மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் கணக்காய்வு!
மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் கணக்காய்வு!
வெளிநாட்டு ஊழியர்களுக்காக முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்தார்.
அந்த வகையில், 2022 மே 1 முதல் 2023 செப்டம்பர் 15 வரை செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தின் மூலம் அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பாக கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது. (ப)