இலங்கை
லங்கா சதொச நிறுவனத்தினால் நுகர்வோருக்கு 5 கிலோ நாடு அரிசி 3 தேங்காய்கள் விற்பனை
லங்கா சதொச நிறுவனத்தினால் நுகர்வோருக்கு 5 கிலோ நாடு அரிசி 3 தேங்காய்கள் விற்பனை
லங்கா சதொச நிறுவனத்தினால் 5 கிலோ நாடு அரிசி மற்றும் 3 தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொசவின் தலைவர் கலாநிதி சமித பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். சதொசவில் நாடு அரிசி கிலோவொன்று 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனைக் கொள்வனவு செய்த பெரும்பாலான வர்த்தகர்கள் வெளியே கொண்டு சென்று நாடு அரிசி கிலோவொன்றை 240 ரூபாவிற்கு விற்பனை செய்ததாகத் தகவல் கிடைத்தது.
இதனைக் கருத்திற் கொண்டு ஒரு தடவையில் 5 கிலோ நாடு அரிசியை மாத்திரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லங்கா சதொசவின் தலைவர் கலாநிதி சமித பெரேரா தெரிவித்துள்ளார்.