விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்: அடிலெய்டு பிட்ச் ரிப்போர்ட், வானிலை நிலவரம்

Published

on

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்: அடிலெய்டு பிட்ச் ரிப்போர்ட், வானிலை நிலவரம்

டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியா-  ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.  பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி முடிந்து 10 நாள் இடைவெளிக்குப் பின் 2-வது டெஸ்ட் நடைபெறுகிறது.இரு அணிகளும் நன்கு ஓய்வெடுத்து சவாலுக்கு தயாராக இருக்கும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. அடிலெய்டில் நடைபெறும் 2வது டெஸ்ட் பகல்/இரவு போட்டியாக இருக்கும், இதில் பிங்க் நிற பந்தில் இரு அணிகளும் விளையாடும். இந்தியா முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடிலெய்டு ஓவல் மைதானத்தின் தலைமைக் கண்காணிப்பாளர் டாமியன் ஹக் வானிலை நிலவரத்தை கூறினார், ரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சமநிலையான ஆடுகளம் இருக்கும் என்று கணித்துள்ளார். இருப்பினும், வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதனால் முதல் இரண்டு நாட்களில் மைதானத்தை  பாதிக்கலாம்.போட்டி தொடர்ந்து நடைபெறும் போது, ​​குறிப்பாக 3வது நாளில் இருந்து விக்கெட் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். பகல்/இரவு டெஸ்ட்களில் பிங்க் பந்து அதன் தனித்துவமான ஸ்விங் பாலிற்கு பெயர் பெற்றது, இதனால் பேட்டர்களுக்கு சவால்களை அதிகரிக்கலாம்.வரலாற்று ரீதியாக, அடிலெய்டு ஓவலில் நடந்த அடிலெய்டில் நடந்த ஆறு பகல்-இரவு டெஸ்டில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version