சினிமா
இன்னும் டப்பிங் வேலைகளே முடியலையா..? விடாமுயற்சி அப்டேட்..!
இன்னும் டப்பிங் வேலைகளே முடியலையா..? விடாமுயற்சி அப்டேட்..!
தடம், கழகத் தலைவன், போன்ற படங்களை கொடுத்த மகிழ் திருமேனிதான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ் , திரிஷா உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். கடந்த வாரம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது.
பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படும் நிலையில் தற்போதுதான் படத்தின் டப்பிங் வேலைகளை அஜித் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் சில பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்கவில்லை என்பதால் அந்த வேலைகளும் மும்மூரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி படக்குழுவும் படத்தை சொன்ன தேதியில் வெளியிட தீவிரமாக செயல்பட்டு வருகிறது.