இலங்கை

இலங்கையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Published

on

இலங்கையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் மீன்களின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 பேலியகொடை மத்திய மீன் சந்தையில், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 2,400 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரையிலும், பரவை மீன் ஒரு கிலோ கிராம் 1,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 லின்னா மீன் ஒரு கிலோகிராம் 1,000 ரூபாய் முதல் 1,100 ரூபாவுக்கும், சாலை மீன் ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 500 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபெங்கல் புயல் காரணமாக கடல்சார் ஊழியர்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தநிலையில், மீன்களின் விலைகளும் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விற்பனை செய்வதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version