சினிமா

ஒரே நாளில் 275 கோடி!! புஷ்பா 2 நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published

on

ஒரே நாளில் 275 கோடி!! புஷ்பா 2 நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் டிசம்பர் 5 ஆம்தேதி உலகளவில் ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2.மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரிலீஸான முதல் நாளிலேயே உலகளவில் 275 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 10 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. கதாநாயகனாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு கிட்டத்தட்ட 300 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவுக்கு 10 கோடி பெற்று முந்தைய பட சம்பளத்துடன் ஒப்பிடும் போது இது மிகப்பெரிய தொகையாம். நடிகர் பகத் ஃபாசிலுக்கு 8 கோடி சம்பளமாகவும் Kissik பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரீலீலாவுக்கு 2 கோடி சம்பளமாகவும் அளித்துள்ளார்களாம்.படத்தின் இயக்குநர் சுகுமாருக்கு 15 கோடி சம்பளமாகவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்களாம். படத்தின் பட்ஜெட் 400 கோடி முதல் 500 கோடி வரை என்று கூறப்பட்ட நிலையில் 1300 கோடி வசூலித்தால் மட்டுமே இப்படம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version