சினிமா

சிறிய மாற்றத்துடன் ஓடிடியில் ரிலீஸாகும் கங்குவா..? ரசிகர்களிடம் பெருகும் ஆர்வம்

Published

on

சிறிய மாற்றத்துடன் ஓடிடியில் ரிலீஸாகும் கங்குவா..? ரசிகர்களிடம் பெருகும் ஆர்வம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் படம் வெளியாவதால்  மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.வரலாற்று கதை அம்சத்தோடு தற்கால தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன கதையை மையமாகக் கொண்டு, இரண்டு மாறுபட்ட உலகங்களில் இரண்டு கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். கங்குவா படத்தை முதலில் பார்த்தவர்கள் பாகுபலி போல் உள்ளது அவதார் போல் உள்ளது என பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்தார்கள். ஆனால் அதன் பின்பு வெளியான விமர்சனங்கள் அத்தனையும் நெகட்டிவ்வாகவே காணப்பட்டது. இது கங்குவா படத்தின் வசூலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொண்ட படக் குழுவினர் படம் 2000 கோடி வசூலிக்கும் இந்த படத்தை வாயை பிளந்து பார்ப்பீர்கள் என்று பலவாறு பில்டப் கொடுத்து இருந்தார்கள். இதுவே ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்கு காரணமாக காணப்பட்டது. ஆனாலும் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளித்த நிலையில் ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.இந்த நிலையில், கங்குவா திரைப்படம் வெளியாகி ஒரு மாதங்களை கடந்த நிலையில் இந்தத் திரைப்படம் டிசம்பர் 13ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தமிழை மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் வெளியாக  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தியேட்டர்களில்  கங்குவா படத்தை 3டியில் திருப்திகரமாக பார்க்க முடியவில்லை என பல ரசிகர்கள் புலம்பினார்கள். ஆனால் தற்போது ஓடிடியில் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் கதைக்களத்தில் கங்குவா சொதப்பி இருந்தாலும் அதில் இடம்பெற்ற அடுத்தடுத்த காட்சிகள், பிரம்மாண்டங்கள் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version