சினிமா

டெய்லி குடிச்சுட்டு இருந்தேன்.. நிறைய கெட்ட வார்த்தை பேசுவேன்.. மனம் திறந்த ஆர்.ஜெ.பாலாஜி

Published

on

டெய்லி குடிச்சுட்டு இருந்தேன்.. நிறைய கெட்ட வார்த்தை பேசுவேன்.. மனம் திறந்த ஆர்.ஜெ.பாலாஜி

சமீபத்தில் ஆர்.ஜெ.பாலாஜியின் சொர்க்கவாசல் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அவரது பொறாத காலம், மழை வெள்ளத்தால் வசூல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மீண்டும் படத்தை மக்களை பார்க்கவைக்கும் முயற்சியில் ப்ரோமோஷனை பலமாக செய்து வருகிறார் ஆர்.ஜெ.பாலாஜி.

ஆர்.ஜெ. வாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த ஆர் ஜெ பாலாஜி, இன்று இயக்கம் நடிப்பு என்று மிகவும் பிசிசியாக இருக்கிறார். அதுவும் இவருக்கு காமெடி மட்டும் தான் வரும் என்பதை உடைத்து ஒரு rugged ஹீரோவாக சொர்க்கவாசல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு முற்றிலும் மாறுபட்ட ஒரு நடிப்பாக உள்ளது.

Advertisement

இப்படி பட்ட சூழ்நிலையில், தற்போது அவர் தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார். அப்படி சமீபத்தில் ஒரு fans meet ஒன்று நடைபெற்றது. அந்த fans meet-ல் ரசிகர்கள் பலரின் கேள்விக்கு பதிலளித்தார்.

அந்த ஒரு நிகழ்வில் தான் ஆர்.ஜெ.பாலாஜியை ஒரு நடிகராக மக்கள் கொண்டாடுவதை விட, இன்றளவும் அவர் பேச்சை தினமும் கேட்டு, ரசிப்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் தான் ஆர்.ஜெ.பாலாஜி தன்னை பற்றிய ஒரு தகவலை தைரியமாக பகிர்ந்துகொண்டார். அவர் ஆரம்ப காலத்தில், அதிகமாக குடிப்பாராம். ஆபாச படங்களை பார்க்கும் பழக்கமும் இருந்ததாம். மேலும் வாயை திறந்தாலே ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவாராம். அதெல்லாம் அவருக்கு ஒரு பவர் கொடுத்ததை போல அவர் நினைத்திருக்கிறார்.

Advertisement

ஒரு கட்டத்தில் இதையெல்லாம் மூட்டை கட்டி வைக்க முடிவு செய்துள்ளார். அப்படி, அவர் ஒவ்வொன்றையும் படிப்படியாக குறைத்து, இன்று அவர் இதையெல்லாம் தொடுவதே இல்லையாம். மேலும் குடிப்பழக்கத்தை நிறுத்திய பிறகு, அவர் காலையில் positive ஆக உணர்ந்தாராம்.

சிகரெட்டு பழக்கத்தை நிறுத்திய பிறகு, மரண பயம் குறைந்ததாம். இப்படி கெட்ட பழக்கங்களை குறைக்கும் அவருக்குள் ஏற்பட்ட மாற்றங்களை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களுக்கு மிகவும் motivation-ஆக இருந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version