இந்தியா
தகாத உறவு..! கணவனை கொல்ல தங்கத்தை அடகு வைத்து கூலிப்படை அனுப்பிய மனைவி
தகாத உறவு..! கணவனை கொல்ல தங்கத்தை அடகு வைத்து கூலிப்படை அனுப்பிய மனைவி
திருப்பூர், அவிநாசி தாமரை கார்டனை சேர்ந்த ரமேஷ் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோபாலகிருஷ்ணன், அஜித், சிம்போஸ், சரண், ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
தொடர்ந்து ஐவரிடமும் நடத்திய விசாரணையில், சையது இர்ஃபான் என்பவர் ரமேஷை கொலை செய்ய 8 லட்சம் ரூபாய் கொடுத்தது தெரிய வந்தது.
இந்நிலையில் சையது இர்ஃபானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்ட ரமேஷின் மனைவி விஜயலட்சுமிக்கும், சையது இர்ஃபானுக்கும் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது.
மேலும் கணவர் ரமேஷை கொலை செய்ய விஜயலட்சுமி தான் அணிந்திருந்த 20 சவரன் நகையை சையது இர்ஃபானிடம் கழற்றி கொடுத்ததும் அதனை அவினாசியில் உள்ள இந்தியன் வங்கியில் அவர் அடகு வைத்து பணம் பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து விஜயலட்சுமி, சையது இர்ஃபான் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த அரவிந்த் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஐவர் என எட்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.