சினிமா

தமிழ்நாட்டில் முதல் இடத்தை பிடித்த மூன்று முடிச்சு! TRP_ல் எதிர்பாராத திடீர் மாற்றம்

Published

on

தமிழ்நாட்டில் முதல் இடத்தை பிடித்த மூன்று முடிச்சு! TRP_ல் எதிர்பாராத திடீர் மாற்றம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் சீசன் 2வில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் ஸ்வாதி கொண்டே. இவருக்கு இந்த சீரியலில் கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து தற்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகின்றார்.அண்ணன் தம்பி மற்றும் அக்கா தங்கைகளுக்கு இடையிலான காதல் கதையையும் அவர்களுடைய திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலில் நடிகை சுவாதி கொண்டே உடன் சித்தார்த், திரவியம கேப்ரில்லா ஆகியோர் நடித்திருந்தார்கள்.d_i_aமக்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் உள்ள இரண்டு ஜோடிகளும் இணைவார்களா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு சுவாரசியமாக ஒளிபரப்பாகி வந்தது. அதன் பின்பு ஈரமான ரோஜாவே சீரியல் இன் சீசன் 2 கிட்டத்தட்ட இரண்டு வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது.இதைத்தொடர்ந்து இந்த சீரியலில் நடித்த நடிகை ஸ்வாதி கொண்டே சன் டிவி சீரியலில் நடிப்பதற்கு கமிட் ஆனார். அதன்படி மூன்று முடிச்சு என்ற புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தி வருகின்றார். அது மட்டும் இன்றி கார்த்திக்கின் 27 ஆவது படமான மெய்யழகன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.இந்த நிலையில், தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முதலாவது இடத்தை பெற்று முன்னிலைக்கு உயர்ந்துள்ளது மூன்று முடிச்சு சீரியல். இதுவரையில் இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை பெற்று வந்த இந்த சீரியல் முதன்முறையாக முதலாவது இடத்தை பெற்றுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version