சினிமா

திரையில் மீண்டும் இணையும் ரியல் ஜோடி.. குஷியில் ரசிகர்கள்

Published

on

திரையில் மீண்டும் இணையும் ரியல் ஜோடி.. குஷியில் ரசிகர்கள்

புஷ்பா 2 படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழ அல்லு அர்ஜுன் ஷோவாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ரஷ்மிக்கா நடித்துள்ளார். அவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும், அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர் அடுத்ததாக கமிட் ஆகும் ஒரு திரைப்படம் பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. இது ரசிகர்களை பயங்கரமாக குஷி படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தனர். மேலும் இவர்கள் காம்போவில் அடுத்து எப்போது படம் வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த எந்த படமும் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து இயக்குனர் ராகுல் சங்கரித்யன் அடுத்த படத்தை விஜய் தேவரைகோண்டாவை வைத்து இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு ஷ்யாம் சிங்க ராய் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இப்படி இருக்க, அவர் கதையை ரஷ்மிக்காவிடம் கூற, அவருக்கு கதை மிகவும் பிடித்துள்ளது. அடுத்ததாக இந்த படத்தில் கமிட் ஆகவுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் புஷ்பா 2 பட ரிலீஸில் கூட, தனது காதலை மறைமுகமாக உறுதி செய்தார். விஜய் தேவரகொண்டாவுடன் இவர் relationship-ல் இருக்கிறார் என்று நீண்ட நாளாக வதந்தி இருக்கும் நிலையில்..

Advertisement

சமீபத்தில் நடந்த ட்ரைலர் லான்ச் நிகழ்ச்சியில், காதலன் பற்றிய கேள்வியை எழுப்பியபோது, அதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே என்று கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இப்படி இருக்க, அவருடன் மீண்டும் இவர் இணைவது பயங்கரமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version