சினிமா

நடிகர் சித்தார்த்தை காணவில்லையா? பிரஸ் மீட்டிங்கில் வெடித்த சர்ச்சை! முழு விபரம்

Published

on

நடிகர் சித்தார்த்தை காணவில்லையா? பிரஸ் மீட்டிங்கில் வெடித்த சர்ச்சை! முழு விபரம்

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்க, உலகநாயகன் கமலஹாசன் நடித்திருந்தார்.1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் முதலாவது பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த காலத்திலேயே இந்தியன் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்ததாக கூறப்பட்டது. அதன் பின்பு கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது.d_i_aஇந்தியன் 2 படத்தில் உலக நாயகன் கமலஹாசன், சமுத்திரக்கனி, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்திருந்தார்கள். ஆனால் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படு தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், பிரஸ் மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்ட சித்தார்த் வழங்கிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், நான் தமிழ் சினிமாவில் இல்லை என்று சொல்கிறீர்களே.. இந்தியன் 2 படத்தில் நடிச்சேன்.. அதெல்லாம் படமா தெரியலையா? நான் நல்லா நடிச்சேன்.. கமல் சார் கூட படம் பண்ணிட்ட.. சங்கர் கூட இரண்டு படம் பண்ணிட்டனு நிறைய பேர் சொன்னாங்க… நான் ஜெயிச்சுட்டு இருக்கேன்… என்ன போய் தமிழ் சினிமாவில் காணமுன்னு சொல்றீங்க… என்ன சார் இதெல்லாம்.. என சித்தார்த் ஆவேசமாக பேசிய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.அதாவது சித்தா படத்தில் நடிகர் சித்தாத்தின் நடிப்பு மற்றும் அதன் கதை அம்சம் என்பன மிகப்பெரிய பாராட்டை பெற்றன. அந்த படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்தார் சித்தார்த். ஆனால் இந்த படத்திற்கு ஏற்பட்ட தோல்வியால் தான் சித்தார்த்தை காணவில்லை என பலரும் கூறிய நிலையிலேயே அவர் இவ்வாறு  கொந்தளித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version