வணிகம்
நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால் EPFO-ன் இந்த ஐடியாவை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..
நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால் EPFO-ன் இந்த ஐடியாவை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..
உங்களுக்கு பல UANகள் ஒதுக்கப்பட்டிருந்தால், EPFO போர்ட்டலில் உள்ள ஒரு உறுப்பினர் ஒரு EPF கணக்கு வசதியைப் பயன்படுத்தி உங்களின் முந்தைய வேலை விவரங்களை, உங்கள் தற்போதைய UAN உடன் ஒருங்கிணைக்கலாம். உங்களது தற்போதைய UAN-ஐ, தற்போதைய PF கணக்குடன் இணைத்திருந்தால், நீங்கள் வேலையை விட்டு வெளியேறிய முந்தைய நிறுவனத்தின் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. இதற்கு உங்கள் பழைய PF கணக்குகளை புதிய PF கணக்குடன் இணைக்க வேண்டும்.
எனவே உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட UANகள் இருந்தால், ஃபார்ம்-13ஐ ஆன்லைனில் சமர்ப்பிப்பதன் மூலம் மீதமுள்ள பணம் மற்றும் சேவை விவரங்களை உங்கள் பழைய UANலிருந்து தற்போதைய UANக்கு மாற்றவும். உங்களின் தனிப்பட்ட விவரங்கள் (பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம் போன்றவை) தவறாக இருந்தால் அல்லது பழைய UANஇல் உள்ள உங்கள் ஆதார் விவரங்களுடன் பொருந்தவில்லை என்றால், உங்கள் முந்தைய நிறுவனத்திடமிருந்து அவற்றைப் புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்டதும், உங்கள் UANஐ உங்கள் ஆதாருடன் இணைக்கவும். விவரங்கள் சரியாக இருந்தால், eKYC போர்ட்டல் மூலம் உங்கள் UAN-ஐ ஆதாருடன் நேரடியாக இணைக்கலாம்.
இந்த செயல்முறைக்கு நீங்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/க்குச் செல்ல வேண்டும்.
ரைட் சைடில் உள்ள, டைரக்ட் UAN அல்லாட்மென்ட் பை எம்ப்லாயிஸ் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் Captchaஐ என்டர் செய்து, OTP ஜெனரேட் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்து சப்மிட் என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
இப்போது “நீங்கள் ஏதேனும் தனியார் நிறுவனம்/தொழிற்சாலை/நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா என்ற கேள்விக்கு YES என்பதை செலக்ட் செய்ய வேண்டும். NO என்பதை செலக்ட் செய்தால், ஹோம் பக்கத்திற்கு சென்று விடுவீர்கள்.
இப்போது கீழே தோன்றும் லிஸ்ட்-இல் இருந்து எம்பிளாய்மென்ட் கேட்டகரி என்பதை செலக்ட் செய்யவும்.
EPFOஇன் கீழ் establishment/company/factory என்ற எம்பிளாய்மென்ட் கேட்டகரியை செலக்ட் செய்தால், PF கோட் நம்பரை என்டர் செய்ய வேண்டும் என்று கேட்கும். இல்லையெனில் establishment விவரங்களை என்டர் செய்ய வேண்டும் என்று கேட்கும்.
இப்பொழுது சிஸ்டமில் establishment விவரங்களைக் காண்பிக்கும். அதில் நீங்கள் வேலையில் சேர்ந்த தேதியை என்டர் செய்து, IDENTITY PROOOF TYPE என்பதை செலக்ட் செய்யவும் மற்றும் செலக்ட் செய்த IDENTITY PROOOF TYPE காப்பியை அப்லோட் செய்ய வேண்டும்.
பின்னர் உங்கள் ஆதார் அல்லது விர்ச்சுவல் ஐடி-ஐ மற்றும் கேப்ட்சாவை என்டர் செய்து, OTP ஜெனரேட் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைலில் பெறப்பட்ட OTPயைச் சப்மிட் செய்யவும்.
பின்னர் சிஸ்டம் ஆனது UIDAIஇலிருந்து விவரங்களைப் பெறும். இப்போது REGISTER பட்டனை கிளிக் செய்யவும்
உங்கள் UAN இப்போது உருவாக்கப்படும்.
உங்கள் மொபைலிலும் UAN பெறப்பட்ட மெசேஜ் வரும்.