இலங்கை

பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானம்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

Published

on

பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானம்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் இன்று (6) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Advertisement

இது குறித்து பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில், “அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.
நீங்கள் அதை கேட்கவில்லை. அதேபோன்று அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு தேவை என்று கூறினோம். முதல் காலகட்டத்தில், முந்தைய அரசாங்கத்தின் விடயங்களை பரிசீலிக்க வேண்டும். அந்த அரசின் அமைச்சர் ஒருவர் கோப் குழுவின் தலைவராக வருவதை நாங்கள் விரும்பவில்லை” என தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​துறைசார் குழுவை நியமிப்பதற்கு ஜனவரி 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் குறிப்பிட்டார்.

Advertisement

அத்துடன் நிதிக்குழு நியமனம் தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உள்ளிட்ட 24 அமைச்சு ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version