சினிமா
பிளேபாயாக இருக்கும் பிக்பாஸ் பாலா.. திகில் ஊட்டும் ஃபயர் ட்ரெய்லர்
பிளேபாயாக இருக்கும் பிக்பாஸ் பாலா.. திகில் ஊட்டும் ஃபயர் ட்ரெய்லர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்தான் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் இறந்த இவர் பிக் பாஸ்க்கு பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இப்போது அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் ஃபயர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்த ட்ரெய்லரில் பிக் பாஸில் பங்குபெற்ற பிரபலங்கள் தான் அதிகம் நடித்திருக்கின்றனர்.
சுரேஷ் சக்கரவர்த்தி,, சாக்ஷி ஆகியோர் பிக் பாஸ் பிரபலங்களாக இருக்கின்றனர். மேலும் நடிகை சாந்தினியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அந்த ட்ரெய்லரில் சாதாரணமாக காணாமல் போய்விட்டார் என்று தேட ஆரம்பிக்கும்போது பெரிய பிரச்சனை காத்திருக்கிறது. மசாஜ் சென்டர் வைத்திருக்கும் பாலா பல பெண்களுடன் எல்லை மீறி பழகுகிறார்.
கடைசியில் பாலா காணாமல் போக அவர் கொள்ளை செய்யப்பட்டார் என்று தெரிகிறது. இதற்கான காரணம் யார் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரா என விசாரணை தீவிரமாக நடந்த வருகிறது.
ஆனால் வேறு ஒரு ஆணால் தான் பாலா கொலை செய்யப்பட்டுள்ளார், அதற்கான காரணம் என்ன என்பது தான் ஃபயர் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு விஷயமும் திகில் ஊட்டும் படி இதில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
பாலாஜி முருகதாஸுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையை ஃபயர் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இந்த படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.