உலகம்

புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை

Published

on

புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை

அடுத்த சில நாட்களில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மைக்கேல் பார்னியர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பிரான்ஸ் ஜனாதிபதி மைக்கேல் பார்னியரை அந்நாட்டின் பிரதமராக நியமித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்படி, 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்வது இதுவே முதல்முறை.

எவ்வாறாயினும், 2027 ஆம் ஆண்டு வரை தான் பதவியில் நீடிப்பார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

அத்துடன், மிஷேல் பார்னியர் பிரதமராக இருந்த குறுகிய காலத்திலேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக பிரான்ஸ் ஜனாதிபதி முன்னாள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version