சினிமா

முதல் படத்திலேயே இவ்வளவு கோடியா.? விஜய் மகன் சஞ்சயின் சம்பளம்

Published

on

முதல் படத்திலேயே இவ்வளவு கோடியா.? விஜய் மகன் சஞ்சயின் சம்பளம்

சினிமாவை விட்டு போகும் நேரம் அவரது மகன் சினிமாவில் நுழைந்து இருக்கிறார். அதாவது விஜய் தளபதி 69 படத்துடன் சினிமாவை முழுவதுமாக விட்டுவிட்டு அரசியலில் முழு நேரம் செயல்பட இருக்கிறார். இப்போது தனது அரசியலுக்கான வேலைகளை மும்மரமாக செய்து வருகிறார்.

விஜய் போல அவரது மகன் சஞ்சய் நடிகராக வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் இயக்குனராக ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வெளிநாடு சென்று படித்து வந்துள்ள லைக்கா உடன் தனது முதல் படத்தை பண்ணுகிறார். முதல் படமே பெரிய தயாரிப்பு நிறுவனமாக அவருக்கு கிடைத்திருக்கிறது.

Advertisement

ஆரம்பத்தில் இவரின் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் சந்தீப் கிஷான் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஜேசன் சஞ்சயின் முதல் படத்திற்கான சம்பளம் வெளியாகி இருக்கிறது.

பொதுவாகவே அறிமுக இயக்குனர்கள் கோடியில் சம்பளம் வாங்குவது என்பது அரிது. ஆனால் நிறுவனம் சஞ்சய்க்கு முதல் படத்தில் கிட்டத்தட்ட 10 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறதாம். விஜய்யின் வாரிசு என்பதால் இவ்வளவு பெரிய தொகையா என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கு இசை அமைக்கிறார். சஞ்சய் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தாலும் கண்டிப்பாக திறமை இருந்தால் அவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.

Advertisement

பல புதிய இயக்குனர்களை தமிழ் சினிமா கொண்டாடி வருகிறது. அந்த லிஸ்டில் சஞ்சையும் இடம்பெறுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இந்த படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version