சினிமா

மும்மை திரையரங்கில் விசிறியடிக்கப்பட்ட ஸ்பிரே.. மூச்சு திணறிய ரசிகர்களால் பரபரப்பு

Published

on

மும்மை திரையரங்கில் விசிறியடிக்கப்பட்ட ஸ்பிரே.. மூச்சு திணறிய ரசிகர்களால் பரபரப்பு

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில்  வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2.  இந்த திரைப்படம் தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றது.புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். செம்மரம் கடத்தலை மையமாகக் கொண்டே இந்த படம் முழுக்க முழுக்க உருவானது. புஷ்பா படத்தின் முதலாவது பாகத்தில் கூலித் தொழிலாளியாக இருக்கும் அல்லு அர்ஜுன் அந்த காட்டுக்கே ராஜாவாகி ஸ்ரீ வள்ளி ஆன ராஷ்மிகாவை திருமணம் செய்கின்றார்.இன்னொரு பக்கம் புஷ்பாவால் நடந்த அவமானத்தை தாங்க முடியாமல் அவரை பழி வாங்குவதற்காக போலீஸ் அதிகாரியாக பகத் பாஸில் காணப்படுகின்றார். இவ்வாறு முதலாவது பாகம் வெளியான நிலையில் இதன் இரண்டாவது பாகம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் நேற்றைய தினம் வெளியானது.d_i_aஇந்த திரைப்படம் பான் இந்திய அளவில் பல மொழிகளிலும் வெளியாகி முதலாவது நாளிலேயே சுமார் 250 கோடி வசூலை கடந்திருந்தது. இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கோவிலில் அம்மன் கெட்டப்புடன் அல்லு அர்ஜுன் புடவை கட்டி நடனம் ஆடியுள்ளார். இந்தப் பாடல் மெய்சிலிர்க்கும் வகையில் காணப்பட்டுள்ளது.இந்த நிலையில், மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றில் புஷ்பா 2 திரைப்படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது அங்கே திடீரென ஸ்பிரே அடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு தொண்டை எரிச்சல், இருமல் ஏற்பட்ட காரணத்தினால் படம் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அத்துடன் புஷ்பா 2 படம் வெளியான முதல் நாளிலேயே கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிர் இழந்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version