இலங்கை

யாழ். பல்கலையில் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை!

Published

on

யாழ். பல்கலையில் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை!

சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வையொட்டி.

Advertisement

பல்கலைக்கழத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சேர். பொன். இராமநாதன், ஆறுமுக நாவலர் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து தீபாராதனை இடம்பெற்றது.

தொடர்ந்து பல்கலைக்கழகப் பேரவை மண்டபத்தினுள் சிரார்த்த தின குருபூசை தின நிகழ்வு இடம்பெற்றது. 

துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடந்த இந் நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் சைவ சமய அபிமானிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.   (ப)
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version