சினிமா
வெளியாச்சு கீர்த்தி சுரேஷின் கல்யாண பத்திரிக்கை… திருமணத்துக்கும் ரஜினிக்கும் இப்படி ஓர் கனெக்சனா?
வெளியாச்சு கீர்த்தி சுரேஷின் கல்யாண பத்திரிக்கை… திருமணத்துக்கும் ரஜினிக்கும் இப்படி ஓர் கனெக்சனா?
2000ம் ஆண்டு வெளியான “பைலட்ஸ்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். இதன் பின்னர் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான “இது என்ன மாயம்” என்ற தமிழ் திரைப்படம் நடிகையாக அறிமுகத்தை கொடுத்தது. இதன் பின்னர் “பைரவா”, “ரஜினி முருகன்”, “மகாநதி”, “சர்கார்”, “அண்ணாத்த” உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சில படங்களிலும் கீர்த்தி சுரேஷ் இடம் பெற்றிருந்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் “தெறி” படத்தின் இந்தி ரீமேக்கான “பேபி ஜான்” படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார். இவருக்கு திருமணம் நடைபெற போவதாக ஏற்கனவே சில முறை தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்றும், மாப்பிள்ளை யார் என்பது குறித்தும் கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. மாப்பிள்ளையின் பெயர் ஆண்டனி தட்டில். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், துபாயில் வசித்து வருகிறார் என்றும், கீர்த்தி சுரேஷ், பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டனி கொச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து காதலை உறுதிப்படுத்தி கீர்த்தி சுரேஷ், தனது வருங்கால கணவரான ஆண்டனியுடன், தனக்கு 15 ஆண்டுகளை கடந்தும் பந்தம் தொடர்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது. இதில், திருமண தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தேதிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ஓர் தொடர்பு இருப்பது தெரிவந்துள்ளது. இதனை வைத்து ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை வாழ்த்தி வருகின்றனர்.
அழைப்பிதழில் கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே டிசம்பர் 12ம் தேதி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து 2021ல் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்தனர்.
இதேபோல், கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா சுரேஷ், நடிகர் ரஜினிகாந்த் உடன் நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கனெக்சன்களை வைத்து, ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் திருமண அழைப்பிதழை பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையே, திருமண அழைப்பிதழில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் சுரேஷ் குமார் மற்றும் மேனகா சுரேஷ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.