வணிகம்

Christmas: ஜிங்கிள் பெல்ஸ்… ஜிங்கிள் பெல்ஸ்… கிறிஸ்துமஸ் குடில் அமைக்க ரெடியா…

Published

on

Christmas: ஜிங்கிள் பெல்ஸ்… ஜிங்கிள் பெல்ஸ்… கிறிஸ்துமஸ் குடில் அமைக்க ரெடியா…

Christmas: ஜிங்கிள் பெல்ஸ்… ஜிங்கிள் பெல்ஸ்… கிறிஸ்துமஸ் குடில் அமைக்க ரெடியா…

Advertisement

டிசம்பர் மாதம் வந்தாச்சு , இனி இந்த மாதம் முடியும் வரை எங்கு பார்த்தாலும் “ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்” என்று தான் ஒலித்துக் கொண்டு இருக்கும், எப்பொழுதும் வருடத்தின் கடைசி பண்டிகையாகக் கொண்டாடப்படுவது கிறிஸ்துமஸ் பண்டிகை தான்.

கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, மாதா கருவுற்ற நாளிலிருந்து இயேசு வருகைக்காகக் காத்திருக்கும் விதமாக வீடுகளில், தேவாலயங்களில் மற்றும் பல இடங்களில் மக்கள் குடில் அமைத்தும் நட்சத்திரம் வைத்தும் காத்திருக்கின்றனர்.

இதனால் கிறிஸ்துமஸ் என்றாலே குடில் அலங்காரம், நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம், பனி பொம்மைகள் மற்றும் பல வகையான வண்ண விளக்குகளைக் கொண்ட டெக்கரேஷன்கள், கிறிஸ்துமஸ் தாத்தா போன்றவை இல்லாமல் அந்த வைப் வராது.

Advertisement

டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் குடில் அமைக்கத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் மற்றும் விதவிதமான நட்சத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தூத்துக்குடி வ.வு.சி சந்தை அருகிலிருந்து வரும் டெக்கரேஷன் கடைகளில் மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், “விதவிதமான மாடல்களில் நட்சத்திரங்கள், குடில்கள் மற்றும் குடிலுக்குள் வைக்கப்படும் பொம்மைகள், கிறிஸ்மஸ் ட்ரீ மற்றும் அதில் தொங்கவிடும் அலங்காரப் பொருட்கள், பனி மரம், பனி பொம்மைகள், கிறிஸ்மஸ் தாத்தா ஆடை போன்ற பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version