வணிகம்
Gold Rate: நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்… சற்று சரிந்த தங்கம் விலை!
Gold Rate: நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்… சற்று சரிந்த தங்கம் விலை!
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.குறிப்பாக இந்தாண்டு இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது.கிட்டதிட்ட சவரன் ரூ.60,000-ஐ நெருங்கியது. இந்நிலையில் தங்கம் விலை சற்று குறைந்து ரூ.55,000 வரை விற்பனை ஆனது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென விலை கடுமையாக உயர்ந்தது. 5 நாளில் ரூ.2,320 அதிகரித்தது.இந்தநிலையில் இன்று மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.7,115 க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.56,920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.