வணிகம்
Last Subha Muhurtham: ஆண்டின் கடைசி சுப முகூர்த்தம்… எகிறி அடிக்கும் பூக்கள் விலை…
Last Subha Muhurtham: ஆண்டின் கடைசி சுப முகூர்த்தம்… எகிறி அடிக்கும் பூக்கள் விலை…
Last Subha Muhurtham: ஆண்டின் கடைசி சுப முகூர்த்தம்… எகிறி அடிக்கும் பூக்கள் விலை…
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது. மேலும் நாளை டிசம்பர் 5 ஆம் தேதி இவ்வருடத்தின் கடைசி சுபமுகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
மேலும், மல்லிப்பூ சீசன் முடிந்துவிட்டதால் மல்லி பூ வரத்து குறைந்து காணப்படுகிறது. அதனால் மல்லிப்பூவின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசேகரநல்லூர், ஆரக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, சேவக்குளம், மணியாச்சி போன்ற சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
மேலும், பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெடிருக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் குறித்து பூ வியாபாரி தனம் கூறுகையில், “மல்லிப்பூ கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. மேலும், மல்லிகைப்பூ வரத்துக் குறைவால் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்.
பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது, சென்ட் பூ கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது, பன்னீர் ரோஜா கிலோ 200 ரூபாய், பட்டன் ரோஜா கிலோ 200 ரூபாய், மேலும் கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய் வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.