சினிமா
Pushpa 2 – The Rule :”3 மணி நேரம் படம் – One second -கூட போரடிக்கல” – புஷ்பா 2 திரைப்படத்தின் ரிவ்யூ இது…
Pushpa 2 – The Rule :”3 மணி நேரம் படம் – One second -கூட போரடிக்கல” – புஷ்பா 2 திரைப்படத்தின் ரிவ்யூ இது…
புஷ்பா 2 திரைப்படத்தின் ரிவ்யூ…
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்த படம் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக புஷ்பா 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு, காமெடி, ராஷ்மிகா மந்தனாவின் காதல் காட்சிகள், பஹத் பாசிலின் வில்லத்தனமான நடிப்பு, படத்தின் பாடல்கள், திரைக்கதை, பின்னணி இசை என கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தையும் வேற லெவலாக இயக்குநர் சுகுமார் வழங்கியிருக்கிறார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். அந்த வகையில் இரண்டாம் பாகத்தில் முதலில் வெளியான பாடலான “புஷ்பா ராஜ்” பாடலும், இரண்டாவதாக வெளியான “சாமி” பாடலும், “கிஸ்கா” பாடலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வெளியான புஷ்பா 2 படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மூன்று மணி நேரம் சென்ற “புஷ்பா 2” திரைப்படத்தில் ஒரு இடத்தில் கூட தங்களுக்கு போரடிக்கவில்லை என திரைப்படத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர். படத்தில் அல்லு அர்ஜுன் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் என்றும் கருத்து தெரிவித்தனர்.
படத்தில் இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் மிரட்டலாக இருப்பதாகவும், திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவும், பஹத் பாசிலும் தங்களது சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக படத்தின் பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் டாப் கியர் போட்டு சென்றுள்ளதாகவும், படம் நிச்சயம் பிளாக்பஸ்டராகும் என ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்துள்ளனர்.