சினிமா

Pushpa 2 – The Rule Review: பட்டைய கிளப்பிய பகத் பாசில்… Part 3 -க்கு வெயிட்டிங்…

Published

on

Pushpa 2 – The Rule Review: பட்டைய கிளப்பிய பகத் பாசில்… Part 3 -க்கு வெயிட்டிங்…

புஷ்பா 2 ரசிகர்கள் கருத்து 

Advertisement

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘‘புஷ்பா”. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2021 டிசம்பர் மாதம் வெளியான நிலையில் படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தெலுங்கு சினிமா என்றாலே ஓவர் கமர்சியல், மசாலா, லாஜிக் மிஸ்ஸிங் போன்ற காட்சிகள் தான் அதிகம் இடம் பெறும்.

இப்படியான சூழலில் இந்த படத்தின் முதல் பாகம் அனைத்து சினிமா ரசிகர்களும் பிடித்தவகையில் அமைந்திருந்ததை அடுத்து தெலுங்கு சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூலை எட்டியது. அதோடு பான் இந்தியா அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை தொட்ட படம் இது. படத்தின் முதல் பாகத்தில் பாடல்களும் பட்டி தொட்டி வரை ஹிட் அடித்தது. இப்படியான சூழலில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்து வந்ததை அடுத்து இந்தப் படம் எப்போது வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று ( டிசம்பர்) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

Advertisement

படம் பற்றி ரசிகர்களின் கூறுகையில் இந்த படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றியடையும் என்பதில் சந்தேகம் இல்லை. அல்லு அர்ஜுன் தனது நடிப்பில் அசத்தி இருக்கிறார் என தெரிவித்தனர். மேலும், இப்படத்தில் நடிப்பு அரக்கன் பகத் பாசிலும் பட்டைய கிளப்பியுள்ளார்.

தொடர்ந்து வசூலில் மீண்டும் இந்த படம் ஆயிரம் கோடியை தாண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் படத்தில் சில காட்சிகள் இடம்பெறாமல் இருந்திருக்கலாம். சில சீன் போர் அடிக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அந்த அளவிற்கு சரியில்லை. பாடல்களும் பெரிதளவில் இல்லை என்று ஒவ்வொருவரும் கலவையான விமர்சனங்களை அளித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version