சினிமா

RRR வசூலை தொடமுடியாத புஷ்பா 2!

Published

on

RRR வசூலை தொடமுடியாத புஷ்பா 2!

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாகவும் ஓப்பனிங்கை பெற்றுள்ளது. படம் முதல் நாளில் 150 கோடி முதல் 200 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் தெரிவிக்கும் சாக்னில்க் இணையத்தளம் புஷ்பா 2 உலகம் முழுவதும் முதல் நாளில் ரூபாய் 175 கோடி வசூல் செய்துள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது.

தெலுங்கு மொழியில் மட்டும் 95 கோடி எனவும், ஹிந்தியில் 67 கோடி, தமிழகத்தில் 7 கோடி, கர்நாடகாவில்1 கோடி, மலையாளத்தில் 5 கோடி என வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வெளியாகி இருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் புஷ்பாவை போல 5 மொழிகளில் வெளியாகி முதல் நாளில் உலகம் முழுவதும் 223 கோடி வசூல் செய்து இருந்தது.

Advertisement

இந்த படம் தான் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்திருந்தது. அந்த சாதனையை புஷ்பா 2 முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்த சாதனையை முறியடிக்க தவறியது. அதே சமயம், விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

ஏனென்றால், கோட் படம் உலகம் முழுவதும் வெளியான முதல் நாளில் 120 கோடி வரை வசூல் செய்து இந்த ஆண்டு வெளியான தென்னிந்திய படங்களில் அதிகமான வசூல் செய்த இரண்டாவது படமாக இருந்தது. தற்போது புஷ்பா 2 உலகம் முழுவதும் முதல் நாளில் ரூபாய் 175 கோடி வசூல் செய்து அந்த சாதனையை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தில் கல்கி திரைப்படம் 193 கோடி வசூல் செய்து இருக்கிறது. அந்த சாதனையையும் புஷ்பா 2 முறியடிக்க தவறியுள்ளது. மேலும், புஷ்பா 2 திரைப்படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருவதால் வார இறுதிக்குள்ள 250 கோடி வசூலை தாண்டிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version