இந்தியா
School Leave | இன்று எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?
School Leave | இன்று எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த வாரம் முதல் விடுமுறை விடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் நேற்று செயல்படத் தொடங்கின.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்பு காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.