சினிமா
ஆடை படத்துல நான் பண்ண தப்பு.. அவரே திட்டினாரு!! ஓப்பனாக பேசிய ரத்னகுமார்..
ஆடை படத்துல நான் பண்ண தப்பு.. அவரே திட்டினாரு!! ஓப்பனாக பேசிய ரத்னகுமார்..
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், கதை – வசனம் எழுதுபவராகவும் திகழ்ந்து வருபவர் தான் இயக்குநர் ரத்னகுமார். மேயாத மான் என்ற வெற்றிப்படத்தினை இயக்கி அதன்பின் ஆடை படத்தினை இயக்கினார்.பின் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர், லியோ படத்திற்கான கதை – வசனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். லியோ பட வெற்றி விழாவின் போது என்னதான் பருந்து உயரப்பறந்தாலும் பசிச்சா இரையைத்தேடி கீழத்தானே வரணும் என்று பேசியது ரஜினிகாந்த் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.சமீபத்தில் ரத்னகுமார் அளித்த பேட்டியொன்றில் மேயாத மான் படம் ரசிகர்களை கவர்ந்தாலும் அந்த படத்தில் நிதானமே இருக்காது. ஆடை படத்தில்தான் அந்த நிதானம் தனக்கு செட்டானதாக தெரிவித்துள்ளார். பல இடங்களில் ப்ரீத்தே இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பது போல் எடிட்டிங் அமைந்தது என்றும் இப்போது அந்த படத்தை பார்க்கும் போது பல குறைகள் தெரிகிறது என்றும் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.ஆடை படத்தின் போஸ்டர் சர்வைவல் ட்ராமாவாக எடுத்ததை ரசிகர்கள் பார்த்து ஒரு ரிவெஞ்ச் ட்ராமாவாக நினைத்து நம்பி ஏமாந்துவிட்டார்கள். முதல்நாள் நிர்வாணமாக அமலா பாலை வைத்து எடுக்கும் போதே எந்த இடத்திலும் ஆபாசமாக தெரியக்கூடாது, ஒரு குழந்தையை பார்ப்பது போன்ற உணர்வுதான் வரவேண்டும் என்று ஒளிப்பதிவாளரிடம் சொன்னேன். அதன்பின் அதுதான் படம் முழுக்க இருந்தது.கடைசியில் இடம்பெற்ற அந்த பிராங்க் போர்ஷன் மற்றும் கற்பு தொடர்பான வசனங்களை தவிர்த்து இருந்தால் நல்ல படமாக வந்திருக்கும், அந்த இடத்தில் சில தவறுகளை செய்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படத்தை பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், எப்படிடா இந்த படத்தை எடுத்த, செளவுத்தில் இதையெல்லாம் அனுமதிக்கவே மாட்டார்களேன்னு சொல்லி திட்டி, பின் பாராட்டியதாகவும் அந்த பேட்டியில் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.