இந்தியா
இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
சிரியா நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்களினால் நடத்தப்பட்டது.
சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்துள்ளது.
இதில், சிரியாவுக்கான அல்-கொய்தா கிளை அமைப்புடன் தொடர்பிலுள்ள ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது கூறுகையில், அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே இலக்கு என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாகவும் அவர்கள் ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறி வருகின்றதாகவும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளதுடன் பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுமாறும்
அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]