இந்தியா

“இருமாப்புடன் சொல்கிறேன்…” – விஜயின் பேச்சுக்கு கனிமொழி பதிலடி

Published

on

“இருமாப்புடன் சொல்கிறேன்…” – விஜயின் பேச்சுக்கு கனிமொழி பதிலடி

கூட்டணி கணக்குகளை நம்பி இருமாப்புடன் 200 தொகுதிகளை வெல்ல நினைக்கும் ஆட்சியாளர்களின் கணக்கை மக்களே மைனசாக்குவார்கள் என்ற விஜயின் கருத்துக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசும்போது, அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இந்திய ஜனநாயக உரிமை தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். மேலும் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றும், மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் மத்திய பாஜக அரசை ஒற்றை வரியில் மட்டும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டில் சமத்துவத்துக்காக மாநில அரசு ஒரு துரும்பையும் எடுத்துப்போடவில்லை என்று, வேங்கைவயலில் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்ததை சுட்டிக்காட்டி பேசினார். சம்பிரதாயத்துக்கு ட்வீட் செய்வதும், அறிக்கை வெளியிடுவதும், மழைநீரில் இறங்கி புகைப்படம் எடுப்பதிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்றார்.

Advertisement

மேலும் கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் கணக்குகளை மக்களே மைனசாக்கி விடுவார்கள் என தெரிவித்தார். விஜயின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பதில்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பேசிய திருமாவளவன், கூட்டணி நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெளிவாக இருப்பதாகவும் கூட்டணி அமைப்பதில் எவ்வித பேராசையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திருச்செந்தூரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, தேர்தல் வெற்றி உங்கள் கைகளில் இருக்கிறது, என்று பணியாற்றினால், இருமாப்போடு சொல்கிறேன் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version