இலங்கை
ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜீவனை முந்தினார் சிறீதரன் எம்.பி
ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜீவனை முந்தினார் சிறீதரன் எம்.பி
இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற குழுத் தலைவர் சிறீதரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியல் குழு உறுப்பினராக முன்மொழிந்தார்.
நேற்று (6) நாடாளுமன்றில், அரசியலமைப்பு குழுவிற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் எம்.பி வெற்றி பெற்றுள்ளார்.
25 உறுப்பினர்களில் ஒருவரை அரசியலமைப்பு குழுவிற்கு நியமிப்பதற்காக கேட்கப்பட்டது.
அப்போது சிறீதரன் எம்.பியை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்மொழிய தமிழரசுக் கட்சியினர் வழிமொழிந்துள்ளனர்.
அதேவேளை ஜீவன் தொண்டமான் அவர்களை நாமல் நாஜபக்சவும், ரவி கருணாநாயக்கவும் வழிமொழிந்து முன்மொழிந்தார்கள்
.
பின்னர் நடந்த வாக்கெடுப்பில் நால்வர் வாக்களிக்காமல் விலக, 21 வாக்குகளில் 11 வாக்குகளை சிறீதரன் எம்.பியும், 10 வாக்குகளை ஜீவன் தொண்டமான் எம்.பியும் பெற்றனர்.
அதேவேளை 1 வாக்கு வித்தியாசத்தில் சிறீதரன் எம்.பி அரசியலமைப்பு குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.