சினிமா

சன் டிவிக்கு தாவிய 4 மாதத்தில் வாங்கிய புதிய கார்!! விஜய் டிவி சீரியல் நாயகி ஸ்வாதி..

Published

on

சன் டிவிக்கு தாவிய 4 மாதத்தில் வாங்கிய புதிய கார்!! விஜய் டிவி சீரியல் நாயகி ஸ்வாதி..

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளும் டாப் இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்தவகையில், கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஸ்வாதி கொண்டே, கன்னட படத்தில் நடித்து பின் தமிழ்நாட்டு பக்கம் வந்தார்.விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார் ஸ்வாதி. பிரியா ரோலில் நடித்த ஸ்வாதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், சன் டிவியில் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க துவங்கினார். தற்போது டிஆர்பியில் இந்த சீரியல் டாப் இடத்தினை பிடித்து வருகிறார்.சீரியலில் நடித்துக்கொண்டே படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்வாதி. சமீபத்தில் கூட மெய்யழகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் நடிகை ஸ்வாதி கொண்டே, ஒரு புதிய கார் ஒன்றினை வாங்கியிருப்பதை புகைப்படத்தோடு ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version