சினிமா

சுந்தரி, கயல் சீரியல் நடிகைக்கே டஃப் கொடுக்கும் மூன்று முடிச்சு நடிகை!! சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம்…

Published

on

சுந்தரி, கயல் சீரியல் நடிகைக்கே டஃப் கொடுக்கும் மூன்று முடிச்சு நடிகை!! சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம்…

சினிமாவில் இருக்கும் அறிமுக நடிகைகளை விட சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகைகள் அதுவும் புதுமுக நடிகைகள் தான் அதிக சம்பளமாக பெறுகிறார்களாம். அப்படி ஒரு நடிகை ஒரு நாளை 1 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறதாம்.அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமாகி தற்போது சன் டிவியில் மூன்று முடிச்சு சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் ஸ்வாதி கொண்டே தானாம்.கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் ஒருசில ரோலில் நடித்து தற்போது சீரியலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தில் அரவிந்த் சாமிக்கு தங்கையாக புவனா ரோலில் நடித்திருந்தார் ஸ்வாதி.இன்ஸ்டாவில் 3 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட ஸ்வாதி, சமீபத்தில் புதிய கார் ஒன்றினை வாங்கி இருக்கிறார். அவருக்கு மூன்று முடிச்சு சீரியலில் ஒரு நாளைக்கு நடிக்க 1 லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம்.எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நம்ம ஜனனி கூட ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்தார். அதேபோல் சுந்தரி சீரியலில் நடித்த கேப்ரியல்லா ஒரு நாளைக்கு 35 ஆயிரமும், கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு 22 ஆயிரம் சம்பளமும் வாங்கி வருகிறார்.அதேபோல் இனியா சீரியலில் நடித்து வரும் நடிகை ஆல்யா மானசா ஒரு நாளை 25 ஆயிரமும், சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனிஷா மகேஷிற்கு 17 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறதாம்.அப்படி பல ஆண்டுகளாக லீட் ரோல்களில் நடித்து வரும் ஆலியா மானசா, சைதரா ரெட்டிக்கே குறைவான சம்பளம் தான் கொடுக்கப்பட்டு வருகிறது என்று ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version