இந்தியா

டாப் 10 நியூஸ்: புத்தக வெளியீட்டு விழாவில் திருமா முதல் மத்தியக் குழு ஆய்வு வரை!

Published

on

டாப் 10 நியூஸ்: புத்தக வெளியீட்டு விழாவில் திருமா முதல் மத்தியக் குழு ஆய்வு வரை!

டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள மத்தியக் குழு ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 7) ஆய்வு செய்கின்றனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில், ஆனந்த் டெல்டும்டே எழுதிய ‘ICONOCLAST’ நூல் வெளியீட்டு விழா விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

Advertisement

திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று நடைபெறுகிறது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

கனமழை காரணமாக, திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண் சரிவு தொடர்பாக மலையின் தன்மை குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக்கூடும். இதன்காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 பைசா குறைந்து ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் 9 பைசா குறைந்து ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திமுக மருத்துவ அணி நடத்தும் சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறைக் கூட்டம் தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது.

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில், உகாண்டா, ரவாண்டா அணிகள் மோதுகின்றன.

Advertisement

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சாந்தி தியேட்டரில், ‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற போது கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதி வழங்கப்படும் என்று அப்படத்தின் நடிகர் அல்லு அர்ஜூன் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முப்படை வீரர்களின் பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் கொடி நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Bye Bye Pakistan: பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்திய ரசிகர்கள்!

Advertisement

டெல்லியில் தாங்க முடியாத அளவுக்கு எகிறும் காற்று மாசு… இன்று முதல் GRAP 3 அமல்!

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version