உலகம்

பணத் தாள்களில் இருந்து பங்களாதேஷ் ஸ்தாபகர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்க முடிவு!

Published

on

பணத் தாள்களில் இருந்து பங்களாதேஷ் ஸ்தாபகர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்க முடிவு!

பங்களாதேஷின் படைப்பாளி உட்பட அந்நாட்டின் தேசிய பிதான என கருதப்படும் ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் உருவப்படத்தை அந்நாட்டு நாணயத்தாள்களிலிருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அச்சிடப்படும் புதிய நாணயத்தாள்களில் அவரது உருவப்படத்தை அச்சிடாமல் இருப்பதற்கு பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் அந்நாட்டு மத்திய வங்கிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் மகளான பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சி கடந்த ஜூலை மாதம் மாணவர்களின் புரட்சியினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது அவரத தந்தையின் உருவச்சிலையை நிர்மூலமாக்குவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் அச்சிடப்படவுள்ள புதிய நாணயத்தாள்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்ட உருவப்படங்களை இணைப்பதற்கு இடைக்கால அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version