தொழில்நுட்பம்
பான் 2.0 புதிய அட்டை எப்படி பெறுவது? கட்டணம் எவ்வளவு?
பான் 2.0 புதிய அட்டை எப்படி பெறுவது? கட்டணம் எவ்வளவு?
மத்திய அரசால் வழங்கப்படும் பான் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. வங்கி பரிவர்த்தனை, வரிமான வரித்துறை பயன்பாட்டிற்கு பான் அட்டை முக்கியமாகும்.அந்த வகையில் தற்போது மத்திய அரசு பான் 2.0 திட்டத்தை கொண்டு வர உள்ளது.அதாவது இதில் கியூ.ஆர் கோடு உடன் வரும் பான் அட்டை வழங்கப்படும். இதனால் ஏற்கனவே பான் அட்டை வைத்திருந்தால் என்ன செய்வது என்று மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ஏற்கனவே பான் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரசு இலவலமாக கியூ.ஆர் கோடு உடன் வரும் அட்டையை புதுப்பித்து வழங்கும். கட்டணம் ஏதும் தேவையில்லை.