தொழில்நுட்பம்

புதிய யு.பி.ஐ மோசடி குறித்து தமிழக சைபர் கிரைம் போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை

Published

on

புதிய யு.பி.ஐ மோசடி குறித்து தமிழக சைபர் கிரைம் போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு, மொபைல் மூலம் பணம் அனுப்பும் யு.பி.ஐ மோசடி குறித்து  பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ஜம்ப்ட் டெபாசிட்’ மோசடி என்று இந்த மோசடி முறைக்கு பெயரிடப்பட்டுள்ளது. மோசடி செய்பவர் ஒரு சிறிய தொகையை, பொதுவாக சுமார் 5,000 ரூபாயை  யு.பி.ஐ  மூலம் ஒருவரின்  வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறார்.  இந்த எதிர்பாராத வைப்புத்தொகை குறித்து பணத்தை பெறுபவருகு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிகிறது. இதையடுத்து அவர் அந்தப் பணம் குறித்து தனது வங்கிக் கணக்கை சரிபார்க்கிறார். மோசடி நபர் அந்தப் பணத்தை திருப்பித் தர கேட்கிறார். இதையடுத்து பணத்தை பெற்றவர்கள் தங்கள் வங்கிச் செயலியைத் திறந்து, பின் நம்பர் கொடுத்து பணத்தை அனுப்ப முயற்சிகிறார். அப்போது மோசடி நபர்களுக்கு Approval அனுப்பபடுகிறது. அப்போது அங்கு மோசடி நடைபெறுகிறது என போலீசார் கூறினர். இதுபோன்று சந்தேகப்படும் படியயாக யு.பி.ஐ மூலம் பணம் வந்தால் அது பற்றி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது இப்படி பணம் வந்தால் உங்கள் வங்கி கணக்கு தொகையை செக் செய்யும் முன் 15-30 நிமிடங்கள் காத்திருக்க கூறுகின்றனர். இப்படி செய்யும் போது அந்த withdrawal request-ன் அவகாசம்  எக்ஸ்பைரி ஆகி விடும் அப்போது நீங்கள் பாதுகாக்கப்டுவீர்கள். அடுத்து நீங்கள் இந்த சந்தேகப் பணத்தை அனுப்பும் போது முதல் முறை தவறான பின் எண்ணை கொடுக்கையில் அந்த withdrawal request எக்ஸ்பைரி ஆகி விடும் அப்போதும் நீங்கள் பாதுகாக்கப்டுவீர்கள் என்று  போலீசார் அறிவுரை கூறியுள்ளனர். அதோடு வங்கியை அணுகவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version