விளையாட்டு
விசா, ஜெர்சி தயார்… என்.சி.ஏ வார்த்தைக்கு காத்திருக்கும் பி.சி.சி.ஐ: ஷமி ஆஸ்திரேலியா செல்வது எப்போது?
விசா, ஜெர்சி தயார்… என்.சி.ஏ வார்த்தைக்கு காத்திருக்கும் பி.சி.சி.ஐ: ஷமி ஆஸ்திரேலியா செல்வது எப்போது?
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.ஆங்கிலத்தில் படிக்கவும்: Border-Gavaskar Trophy: Selectors awaiting NCA fitness report to fly Mohammed Shami to Australiaஇந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் மிரட்டி எடுத்த ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா,2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் பண்ட் 28 ரன்னுடனும், நிதிஷ்குமார் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி இன்னும் 29 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.காத்திருக்கும் பி.சி.சி.ஐஇந்த நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ) ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.தேர்வுக் குழு ஷமியை டெஸ்ட் அணியில் சேர்ப்பதற்காக, என்.சி.ஏ-வின் சமீபத்திய உடற்தகுதி சோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொண்டுள்ளது. அவருக்கான ஆடைகளை பி.சி.சி.ஐ ஏற்கனவே தயார் செய்துள்ளது என்றும், அவரது விசா கூட தயாராக இருப்பதாகவும், அறிவிப்பு வெளியானதும் ஷமி ஆஸ்திரேலியா செல்வார் எனவும் தெரிகிறது. “ஷமி மீதான என்.சி.ஏ-வின் உடற்தகுதி அனுமதி அறிக்கைக்காக தேர்வுக் குழு காத்திருக்கிறது. உடற்தகுதி தேர்வு செய்ய அவர் பெங்களூரு சென்றார். அவர் ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டி20 களில் விளையாடி இருக்கிறார். அதில் அவர் சிறப்பாகவும் செயல்பட்டார். அவரது கிட் கூட தயாராக உள்ளது. என்.சி.ஏ-வின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதனிடையே, முகமது ஷமியின் குழந்தைப் பருவ பயிற்சியாளரான முகமது பதுருதீன் கூறுகையில், ஷமிக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவர் ஃபிட்டாக இருக்கிறார். அவர் ஒரு ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடியுள்ளார், சையத் முஷ்டாக் அலி டிராபியின் காலிறுதிக்கு பெங்கால் செல்ல உதவினார். அவர் ரெட் பால் போட்டிகளில் நீண்ட நேரம் வீசினார். ஒயிட் பால் போட்டிகளில் 20 ஓவர்கள் முழுவதும் களமிறங்கினார். எனவே, அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரம் வேண்டும்.இந்திய அணி நிர்வாகம் தொடரை வெல்ல விரும்பினால் பிரிஸ்பேன் டெஸ்டுக்கு முன்னதாக அவரை அழைப்பார்கள். ஒரு பும்ரா தொடரை வெல்ல மாட்டார். அவருக்கு உதவி தேவை, அதை இந்த டெஸ்டில் பார்த்தோம். அனுபவம் என்று ஒன்று உண்டு. அவர் ஆஸ்திரேலியா செல்லவில்லை என்றால், விஜய் ஹசாரே டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடுவார். இதில் யாருக்கு நஷ்டம்?” என்று அவர் கூறியுள்ளார். ஜூன் 2023 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதித் தோல்வியின் போது கடைசியாக ஒரு டெஸ்டில் பங்கேற்ற ஷமி, முழங்கால் காயம் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வெற்றிகரமாக மீண்டும் திரும்பினார். 34 வயதான அவர் சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டியில் பெங்கால் வேகத் தாக்குதலை முன்னெடுத்தார், நாக் அவுட்களை அடைய ஏழு போட்டிகளில் 7.67 என்கிற எக்கனாமியில் 8 விக்கெட்டுகளை எடுத்தார்.ஷமி ஒரு ரஞ்சி டிராபி போட்டியிலும் விளையாடினார் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு எதிராக பெங்கால் அணியை ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தி த்ரில் வெற்றிக்கு வழிவகுத்தார். எவ்வாறாயினும், டிசம்பர் 14 ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கும் அடுத்த டெஸ்டில் ஷமி மீண்டும் அணியில் சேர்வார் என்று சாஸ்திரி கூறினார். தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகள் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் டிசம்பர் 26 மற்றும் ஜனவரி 7 க்கு இடையில் நடைபெறும்.”பிரிஸ்பேன் கொஞ்சம் சீக்கிரமாக இருக்கலாம், ஒருவேளை மெல்போர்ன் மற்றும் சிட்னி அவர் இந்திய அணியில் இடம் பெறலாம்” என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“