இலங்கை

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

Published

on

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

இலங்கையில் கடந்த சில நாட்களில் கொட்டித்த தீர்த்த மழையால், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Advertisement

அதேவேளை இல்ங்கையில் இந்த ஆண்டில் சுமார் 10,000 எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் எலிக் காய்ச்சலால் 120 முதல் 200 பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிருமிகள் உடலுக்குள் உட்புகுந்து, எலிக்காய்ச்சலுக்கு ஆளாக நேரிடும் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

அதேவேளை அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சு மக்களை அறிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version