உலகம்

20 ஆண்டுகளாக தும்மலால் அவதிப்பட்ட இளைஞர்… காரணத்தை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்..!

Published

on

20 ஆண்டுகளாக தும்மலால் அவதிப்பட்ட இளைஞர்… காரணத்தை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்..!

Advertisement

தனக்கு நாள்பட்ட தும்மல், மூக்கடைப்பு மற்றும் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக அவர் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட, முதலில் யாருடைய அறிவுரையும் இன்றி பாரம்பரிய சீன மருந்தை உட்கொள்வதன் மூலம் தன்னைத்தானே குணப்படுத்த முயன்றுள்ளார் ஜியோமா. அதை சாப்பிட்டும் எந்தவித நேர்மறையான விளைவுகளும் இல்லாததால், ஸியான் கயோஸின் மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளார். இங்கு பரிசோதனை செய்தபோது இந்த ஒவ்வாமை நாசியழற்சியால் வந்தது என்றும் ​​அவரது நாசியின் உள்ளே அந்நிய பொருள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

“நாசி துவாரத்தை எண்டோஸ்கோபி செய்தபோது, ​​நாங்கள் ஒரு பொருளைக் கண்டுபிடித்தோம். அதை பிரித்தெடுக்கப்பட்ட போது, இரண்டு செ.மீ அளவுள்ள பகடைக்காய் என்பது தெரிந்தது. நீண்ட காலத்திற்கு அவரது நாசி குழிக்குள் இருந்ததால் பகுதியளவு அரித்துப் போயிருந்தது. இது கீழ் நாசியில் இருந்ததால் நாசி சளிக்கு சேதம் ஏற்பட்டது” என்று மருத்துவர்கள் கூறினர்.

Advertisement

இந்நிலையில், தனக்கு மூன்று அல்லது நான்கு வயதாக இருந்தபோது தற்செயலாக இந்தப் பொருள் மூக்கில் நுழைந்திருக்கலாம் என்று நினைவு கூர்ந்தார் ஜியோமா. இருப்பினும், பகடைக்காய் எப்படி ஒரு நபரின் மூக்கில் நுழைந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது உடலில் இப்படியொரு பொருளுடன் வாழ்ந்து வந்தாலும், ஏதேனும் நீண்டகால உடல்நல விளைவுகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.

இந்தப் பகடைக்காயை வெளியே எடுக்கும்போது, ​​ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது சுவாசப்பாதைக்குள் விழுந்து, மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும். அதிர்ஷ்டவசமாக, அந்தப் பொருள் மருத்துவர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி, குழந்தைகள் எப்போதும் பெற்றோரின் கண்காணிப்பில் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தை மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஜியோமாவிற்கு நேர்ந்த விசித்திர சம்பவம் சீனாவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது பெற்றோர்கள் அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை ஆகும். மூக்கில் வேறு பொருட்கள் இருப்பது நகைச்சுவையான விஷயம் கிடையாது; அசாதாரண அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்வதே சிறந்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version