இந்தியா

2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 21.69 லட்சம் பேர் காசநோயால் பாதிப்பு…!

Published

on

2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 21.69 லட்சம் பேர் காசநோயால் பாதிப்பு…!

Advertisement

இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற அரசுகள் நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் இன்னும் நிலைமை சீரடையவில்லை. அறிக்கைகளை பார்த்தால், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக நோயாளிகள் உள்ளனர் என்பது தெரிய வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை சுமார் 21.69 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காசநோய் இன்னும் ஒரு பெரிய சுகாதார சவாலாக உள்ளது என்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.

2020ஆம் ஆண்டில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.05 லட்சமாக இருந்தது. இது 2023இல் 25.52 லட்சமாக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில், இந்தியாவில் 21.69 லட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகரிப்பு இருந்தபோதிலும், தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் (NTEP) கீழ், இந்தியாவை காசநோய் இல்லாததாக மாற்ற குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று படேல் கூறினார். உலகளாவிய இலக்கான 2030ஐ விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது 2025க்குள் காசநோயை அகற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisement

2015இல் 1,00,000 மக்கள் தொகையில் 237 பாதிப்புகள் இருந்தன. இது 2023இல் 195ஆகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதமானது 2015இல் 1,00,000 மக்கள்தொகையில் 28ஆக இருந்து, 2023இல் 22ஆக குறைந்துள்ளது. அரசின் திட்டங்கள் மூலம் படிப்படியாக தங்கள் இலக்குகளை அடைவதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்காக, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) கீழ் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று படேல் கூறியுள்ளார்.

Advertisement

மாநில மற்றும் மாவட்ட அளவில் குறிப்பிட்ட ஸ்ட்ராட்டஜிக் பிளான்கள் மூலம் அதிக காசநோய் உள்ள பகுதிகளில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

காசநோயாளிகளுக்கு இலவச மருந்துகள் மற்றும் நோய் கண்டறிதல் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாலிக்குலர் டியக்னோஸ்டிக் லேப்கள் துணை மாவட்ட அளவில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

நிக்ஷய் போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

காசநோய்க்கான அறிவிப்பு மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ள தனியார் சுகாதார மையங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version